வேலூர்: ரேசன் கடை அரிசியில் மனிதக் கழிவுகளும் கலந்திருந்தது வேலூர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் அங்குள்ள ரேசன் கடையில் அரசி வாங்கியுள்ளார். வீடு திரும்பியபின் அரிசிப் பையை திறந்தபோது அதிலிருந்து துர்நாற்றம் வீசியதுடன் அரிசியில் மனிதக் கழிவுகளும் காணப்பட்டன. அதிர்ச்சி அடைந்த அமுதா, ரேசன் கடைக்குச் சென்று முறையிட, அங்கிருந்த ஊழியர்கள், காய்ந்த நிலையில் காணப்பட்ட மனிதக் கழிவுகள் கலந்திருந்த அரிசியைப் பெற்றுக் கொண்டு, வேறு மூட்டையில் இருந்து அரிசி வழங்கினர்.
ரேசன் கடை அரிசியில் கலந்திருந்த மனிதக் கழிவு
1 mins read

