காந்திநகர்: குஜராத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவர் பலியாகினர். பல வீடுகளுக்கு தீ வைக்கப் பட்டதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. வடவள்ளி கிராமத்தில் உள்ள பள்ளியில் பல மாணவர்கள் இத்தேர்வை எழுதி னர். அப்போது இரு மாணவர்கள் இடையே தகராறு மூண்டுள்ளது. இருவரும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். அதன்பின்னர் மாண வர்கள் கலைந்து சென்றாலும் இந்த மோதல் குறித்த தகவல் வெளியே பரவியது. இதையடுத்து மூன்று கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் மோதலில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். மேலும் வீடுகளுக்கும் தீ வைத்து கோபத்தை வெளிப்படுத்தினர்.
குஜராத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல்: இருவர் பலி; 50 வீடுகள் தீக்கிரை
1 mins read

