சென்னை: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தே கிக்கப்படும் சென்னை நபர்கள் இருவரிடம் மத்திய உளவு அமைப்பின் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அத்தகைய தகவல்களின் பேரில் உளவு அமைப்பினரும் பல்வேறு மாநில காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டு, பலரைக் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் டெல்லியில் வைத்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் கள் சிலர் அடையாளம் காணப்பட் டனர். அவர்களை ரகசியமாக கண்காணித்த உளவு அமைப்பின் அதிகாரிகள், பின்னர் தகுந்த ஆதாரங்களுடன் அனைவரையும் கைது செய்தனர்.
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு என சந்தேகம்: இருவரிடம் விசாரணை
1 mins read

