தமிழக நலன் சார்ந்த முடிவுகளை எடுக்கத் தயங்கும் மத்திய அரசு: ஸ்டாலின் புகார்

தமிழக நலன் சார்ந்த முடிவுகளை எடுக்கத் தயங்கும் மத்திய அரசு: ஸ்டாலின் புகார்

1 mins read

சென்னை: பல்வேறு விவகாரங்க ளில் தமிழக நலன் சார்ந்த முடிவு களை எடுக்க மத்திய அரசு தயங் குவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், குற்றவாளியின் வழிகாட் டுதலில் செயல்பட்டுக் கொண்டி ருக்கும் பினாமி அதிமுக அரசு தமிழகத்தின் நலன்களை ஒவ் வொன்றாக காவு கொடுத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப் பதாகத் தெரிவித்துள்ளார்.

"லட்சக்கணக்கான மாணவர் கள், குறிப்பாக கிராமப்புற மாண வர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி யில் சேருவதற்கான 'நீட்' தேர்வை எழுதும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நேரத்தில், சட்டப்பேரவையில் கண்துடைப்பிற்காக ஒரு சட் டத்தை நிறைவேற்றி விட்டு, அந்த சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியாமல், சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து கிடைக்கும் வழிகாட்டு தலில் தவித்துக்கொண்டிருக் கிறது தமிழக அரசு," என ஸ்டாலின் சாடியுள்ளார்.