அமைச்சர்களின் ஊழல்: வெளியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

அமைச்சர்களின் ஊழல்: வெளியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

1 mins read
397c181a-88e1-42fb-afbb-10d2b42d1ddc
-

சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயல லிதாவின் மறைவை அடுத்து ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற் போது மூன்றாகப் பிளவு கண் டுள்ள அதிமுக பலம் இழந்து காணப்படுவதாக அரசியல் கள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுவின் மூன்று அணிகள் சார்பாகவும் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பாக மதுசூதனன் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.