ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியில் ஜெலட்டின் குச்சிகள்

ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியில் ஜெலட்டின் குச்சிகள்

1 mins read

சென்னை: கேட்பாரற்று காணப்பட்ட சிறு பெட்டியில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டதால் தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. பயணிகள் பலர் பீதியடைந்தனர். அந்த ரயில் நிலையத்தில் நேற்று வழக்கம் போல், பணிக்குச் செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள், சிறு வியாபாரிகள் எனப் பலரும் ரயிலுக்காகக் காத்திருந்தனர். அப்போது அங்கு மூடப்பட்ட நிலையில் கேட்பாரற்று ஒரு சிறிய பெட்டி பயணிகளின் கண்ணில் பட்டது. இதுகுறித்து பயணிகள் ரயில்வே போலிசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலிசார், அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் சில ஜெலட்டின் குச்சிகள் காணப்பட்டன. இதையடுத்து அவற்றைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.