ராமேசுவரம்: ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த 3 பெண்களிடம் மர்ம நபர்கள் நகைகளைத் திருடி உள்ளனர். பங்குனி அமாவாசையை முன்னிட்டு இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். புதுக்கோட்டை, சேலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி முடித்த பின்னர், கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது தாங்கள் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலிசார் விரைந்து வந்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும் திருடர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ராமேசுவரம் கோவிலில் 3 பக்தைகளிடம் இருந்து 13 பவுன் நகைகள் திருட்டு
1 mins read

