சுயேட்சை வேட்பாளருக்கு மிரட்டல்

சுயேட்சை வேட்பாளருக்கு மிரட்டல்

1 mins read

சென்னை: வேட்பு மனுவைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமக்கு கைபேசி வழி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஆர்கே நகரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும், கணேஷ் என்ற அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தமக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். "நீ தினகரனுக்கு எதிராகப் போட்டியிடுகிறாய். எனவே போட்டியில் இருந்து விலக வேண்டும், அல்லது பணத்தை பெற்றுக் கொண்டு வேட்பு மனுவைத் திரும்பப் பெற வேண்டும்' என மர்ம நபர் மிரட்டினார். அதற்கு நான் மறுத்துவிட்டேன்," என்று கணேஷ் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.