மண் பானை குக்கர், தண்ணீர் பானை விற்பனை அமோகம்

மண் பானை குக்கர், தண்ணீர் பானை விற்பனை அமோகம்

1 mins read
0f76d7aa-330e-43b7-9910-aae732f2b490
-

சென்னை: மண் பானை குக்கர், தண்ணீர் பானைகளின் விற் பனை சென்னையில் சூடுபிடித் திருக்கிறது. மண் பானைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளின் ருசி நன்றாக இருக்கும் என்பது பலரது கருத்து. நீண்ட காலமாகவே தமிழகத்தில் மண் பானைகளில் குடிநீரை சேகரித்து வைத்து அருந்துவது வழக்கம். அதே போல் சட்டிப் பானைகளில் உணவுப் பொருட்களை வைத்துச் சாப்பிடுவர். காலத்தின் ஓட்டத்தில் மண் பானைகளிலும் சில புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. மண் பானைகளையே குக்கராக வடி வமைத்து பயன்படுத்தத் துவங்கி உள்ளனர். அம்மிகளும் உரல்களும் மிக்சி, கிரைண்டர்களாக உரு மாற்றம் கண்டுள்ள நிலையில், மண் பானை குக்கர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.