பத்திரப் பதிவுக்கான தடை தளர்வு: நீதிமன்றம் உத்தரவு

பத்திரப் பதிவுக்கான தடை தளர்வு: நீதிமன்றம் உத்தரவு

1 mins read

சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கான பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தளர்வு செய்யப்பட்டுள் ளது. சென்னை உயர்நீதி மன்றம் இது தொடர்பான வழக்கில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஏராளமான விவ சாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அதே போல் அங்கீகாரமற்ற வீட்டு மனைகள், அடுக்கு மாடி குடியி ருப்புகளும் அதிகளவில் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வந்தன. இதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதை விசாரித்த நீதிமன்றம், விளைநிலங்களை வீட்டு மனைக ளாக மாற்றுவதற்கும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளை பத்திரபதிவு செய்யவும் தமிழக பதிவுத்துறைக்கு தடை விதித்தது.