தேர்தல் அதிகாரியைக் கண்டித்து ஆர்கே நகரில் திமுகவினர் சாலை மறியல்

தேர்தல் அதிகாரியைக் கண்டித்து ஆர்கே நகரில் திமுகவினர் சாலை மறியல்

1 mins read
c52083a4-954b-4241-ae16-55e65a8e10b2
-

சென்னை: இடைத்தேர்தல் நடை பெற உள்ள ஆர்கே நகர் தொகுதி யில் தேர்தல் அதிகாரியைக் கண்டித்து திமுகவினர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு நிலவியது. தேர்தல் அதிகாரி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணம் விநியோகித்த தாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர்கே நகர் தொகுதியின் சில பகுதிகளில் தினகரனுக்காக வாக்கு சேகரித் தார். அப்போது அவருடன் வந்த அதிமுகவினர் பெண் வாக்காளர் களுக்குப் புடவை, எவர் சில்வர் குடம், ரொக்கப் பணம் ஆகிய வற்றைத் தருவதாக உறுதியளித்து அப்பெண்களின் பெயர், கைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைக் குறித்துக் கொண்டதாகக் கூறப் படுகிறது.

மறியலில் ஈடுபட்ட திமுகவினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறை அதிகாரிகள். படம்: தமிழக ஊடகம்