தமிழக மீனவர்களை இந்திய சுற்றுக்காவல் படையினரே தாக்கிய கொடூரம்

தமிழக மீனவர்களை இந்திய சுற்றுக்காவல் படையினரே தாக்கிய கொடூரம்

1 mins read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற் றும் காரைக்கால் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடுக் கடலில் தாக்குதல் நடத் தியது மீனவ கிராமங்களில் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள் ளது. ஜெகதாபட்டினத்தில் இருந்து 174 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 16 கடல்மைல் தொலைவில் மீன்பிடித் துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றுக்காவல் வந்த இந்திய கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் மீன வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் மணல் மேல்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் காரைக்கால் மீனவர் கள் மீதும் இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். எட்டு படகுகளில் சென்ற 80 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இந்திய கடற் படையினர் தாக்குதல் நடத்தியுள் ளனர்.