வாகனங்களின் உதிரிப் பாகங்களைத் திருடி விற்ற காவல்துறை அதிகாரிகள்

வாகனங்களின் உதிரிப் பாகங்களைத் திருடி விற்ற காவல்துறை அதிகாரிகள்

1 mins read

மதுரை: வழக்குகளில் சிக்கிய வாகனங்களின் உதிரி பாகங்களைத் திருடி விற்ற இரண்டு காவல்துறை ஆய்வாளர்கள், ஒரு தலைமைக் காவலர் என மூன்று பேரை மதுரை தலைமைக் காவல்துறை அதிகாரி பணி நீக்கம் செய்து உத்தர விட்டார். விபத்து, திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் சிக்கிய வாகனங்களைக் காவல்துறையி னர் மீட்டுக் காவல் நிலையங் களில் குவித்து வைத்துள் ளனர். மேலூர் மற்றும் கீழவளவு காவல்நிலையங்களில் உள்ள வாகனங்களின் உதிரிப் பாகங் களை அந்த அதிகாரிகள் திருடி விற்பதாக மாவட்ட காவல் தலைமை அதிகாரி விஜயேந்திர பிதாரிக்கு புகார்கள் வந்தன.

அதனையொட்டி தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கீழவளவு காவல்துறை நிலையங்களில் சிறப்பு ஆய்வாளர்களாகப் பணியாற்றிய காதர் மைதீன், மாயகிருஷ்ணன் மற்றும் மேலூர் தலைமைக்காவலர் அரிச்சந்திரன் ஆகியோர் உதிரிப் பாகங்களைத் திருடி விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து மூன்று பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்ட னர்.