விமானப் பயணிகள் தங்களின் கைப்பைகளுக்கு பாதுகாப்பு முத் திரை பெற வேண்டிய கட்டாயம் நேற்று முதல் ஏழு விமான நிலை யங்களில் நீக்கப்பட்டது. உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 80% கையாளும் டெல்லி, மும்பை, கோல்கத்தா, பெங்களூரு, ஹைத ராபாத், அகமதாபாத், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் பயணிகள் இனிமேல் பாதுகாப்பு முத்திரை பெறவேண்டிய அவ சியம் இருக்காது. நாடு முழுவதும் உள்ள 12 முக்கிய விமான நிலையங்களில் கள ஆய்வு செய்த பின்னர் இந்த விமான நிலையங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் பெருநகர விமான நிலையங்களில் சென்னைக்கு மட் டும் அந்த விதிவிலக்கு அளிக்கப் படவில்லை. சென்னை உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிலையங் களில் சோதனை தொடருகிறது.
சென்னையில் சோதனை, மற்ற பெருநகரங்களுக்கு விலக்கு
1 mins read

