சென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சதாசிவம் (படம்). அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஜக ஆதரவோடு கேரளாவின் ஆளுநராக நியமிக்கப் பட்டார். இன்னும் சில மாதங்களில் அதிபர், துணை அதிபர் பதவிகளுக் கான தேர்தல் நடைபெற உள்ளது. துணை அதிபர் பதவியைப் பிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக சதாசிவம் இறங்கியுள்ளாராம். முதல் கட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதரவைக் கேட்டிருக் கிறார் அவர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் பாஜக தலைவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறாராம் சதாசிவம். ஆனால் பாஜக மேலிடம் சதாசிவத்தை தற்போதைய நிலையில் ஆதரிக்குமா என்பது சந்தேகம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
துணை அதிபர் பதவியைப் பிடிக்க தீவிரம் காட்டும் சதாசிவம்
1 mins read
-

