நாட்டிலேயே நீளமான சுரங்கச் சாலையை மோடி திறந்துவைத்தார்

நாட்டிலேயே நீளமான சுரங்கச் சாலையை மோடி திறந்துவைத்தார்

1 mins read
b3911992-e8dc-4855-94fc-3033ef8f9177
-

ஜம்மு: காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் செனானி =நஷ்ரி இடையே மலையைக் குடைந்து 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு=ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான இந்த சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். சுரங்கப் பாதையில் காற்றேட்டம், தீத் தடுப்பு, தகவல் தெடர்பு மற்றும் மின்சாதனங்கள் அனைத்தும் தானாக இயங்கும் வகையில் இந்தியாவிலேயே முதலாவதாக உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ளது.

புதிய சுரங்கச் சாலையில் பயணம் செய்த பிரதமர் மோடி. படம்: ஊடகம்