பெங்களூர்: சிறையில் இருந்து வெளியே வந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளாராம் சசிகலா. இதற்காக தமக்கு உடல்நிலை சரியில்லை என நாடகமாடி 15 நாட்கள் பெங்களூர் மருத்துவ மனையில் தங்கி ஓய்வெடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். அவருக்கு 15 நாள் பரோல் கிடைக்கும் என்றும் சசிகலாவைப் போல தம்மை யும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அவருடன் சிறைவாசம் அனுபவிக்கும் இளவரசி அடம் பிடிப்பதாகவும் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும் இருவரும் ஒரே நேரத்தில் பரோலில் விடுவிக்கக் கோரினால் அனுமதி கிடைக்காது என்று வழக்கறிஞர்கள் கூறிவிட்டதாகக் கேள்வி.
பரோலில் வெளியே வர திட்டமிடும் சசிகலா: தமிழக ஊடகம் தகவல்
1 mins read

