இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சு நாட்டில் இருக்கும் தலைசிறந்த 100 கல்லூரிகள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு சிறந்த கல்லூரிகள் இல்லை என்று பட்டியல் குறிப்பிடுகிறது. சென்னையில் அமைந்திருக்கும் லயோலா கல்லூரி இந்தியாவிலேயே இரண் டாவது தலைசிறந்த கல்லூரி என்று வகைப் படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னையின் மகளிர் கிறிஸ்துவ கல்லூரி பட்டியலில் 10வது இடத்தில் இருக் கிறது. திருச்சியில் செயல்படும் பிஷப் ஹீபர் கல்லூரி நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவிலேயே தலை சிறந்த கல்லூரிகள் 10ல் உள்ள இந்த மூன்று கல்லூரிகளும் தமிழ்நாட்டில் செயல் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 100 கல்லூரிகளில் 10 கல்லூரிகள் கோயம்புத் தூரில் இருக்கின்றன. திருச்சியில் நான்கு கல்லூரிகள் செயல்படுகின்றன. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடு துறையின் ஏவிசி கல்லூரி இந்தியாவிலேயே தலைசிறந்த 44வது கல்லூரியாக திகழ் கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைசிறந்த இந்தியக் கல்லூரிகள் 100ல் தமிழகத்தில் 37; முதல் இடத்தில் மாநிலம்
1 mins read

