ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளியாக அறிவிக்க முடியாது : உச்ச நீதிமன்றம்:

ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளியாக அறிவிக்க முடியாது : உச்ச நீதிமன்றம்:

2 mins read
df77638e-5f4b-4811-90f1-6861862d0ae5
-

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கின் குற்றவாளியாக அறிவிக்கப்பட மாட்டார் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்கும் விதமாக அவரைக் குற்றவாளியாக அறிவிக்கக் கோரிய கர்நாடக அர சின் மனுவைத் தள்ளுபடி செய்த வேளையில் உச்ச நீதிமன்றம் இவ் வாறு அறிவித்தது. ஜெயலலிதா, சசிகலா, சுதாக ரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் தது. ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவரைக் குற்றவாளி என்பதிலிருந்து விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இருப்பினும், அவருக்கு சிறப்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை அது உறுதி செய்தது.

ஆனால், ஜெயலலிதாவை விடுவித்ததாக அறிவித்த தீர்ப்பை மாற்றி அவரை குற்றவாளி என்று அறிவிக்கக் கோரி கர்நாடக அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. "வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஒருவர் இறந்துவிட்டால் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் முடி வுக்கு வந்ததாகக் கூற முடியாது. அதனால், சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை எப்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததோ அப்போது ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப் பட்டதாக அறிவிக்க வேண்டும்.," என மனுவில் கோரிக்கை விடுக் கப்பட்டது. நீதிபதிகள் பினாகி சந் திரகோஷ் அமித்வா ராய் ஆகி யோர் அடங்கிய அமர்வு, இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்தது.