புதுடெல்லி: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விவசாயிகளின் ரூ.36,359 கோடி பயிர்க்கடன், வராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளதால் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார். "யோகி எடுத்த நடவடிக்கை சரியான திசையில் செல்கிறது," என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாராட்டியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத் தகவல் கூறுகிறது. இதுதொடர்பாக, தனது டுவிட் டர் பக்கத்தில் அவர் நேற்று அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், "விவசாயிகளுக்கு உ.பி. அரசு செய்துள்ள இந்தச் சலுகை சிறு அளவிலான நிவா ரணம்தான் என்றாலும் சரியான பாதையை நோக்கிச் செல்லும் நல்ல ஒரு முடிவு," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.36,359 கோடி கடன் தள்ளுபடி; யோகியைப் பாராட்டிய ராகுல்
1 mins read

