தூத்துக்குடி: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வரும் நிலையில், இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 7 இலங்கை மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர். தூத்துக்குடியில் இருந்து 58 கடல் மைல் தொலைவில் கைதான ஏழு பேரும் பின்னர் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீனவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக கடலோர காவல் படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை கடந்த இலங்கை மீனவர்கள் ஏழு பேர் கைது
1 mins read

