நிலம் கையகப்படுத்த என்எல்சிக்கு எதிர்ப்பு: தீக்குளிப்பு, கல்வீச்சு

நிலம் கையகப்படுத்த என்எல்சிக்கு எதிர்ப்பு: தீக்குளிப்பு, கல்வீச்சு

1 mins read

நெய்வேலி: நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்து என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக நெய்வேலியில் பொதுமக் கள் போராட்டம் நடத்தினர். இச் சமயம் 4 பெண்கள் தீக்குளித்த தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெய்வேலி என்எல்சி சுரங்கத் தில் விரிவாக்கப் பணிகளை மேற் கொள்ள சுரங்க நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. விரிவாக்கப் பணிக ளுக்காக சுரங்கத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளில் நிலம் கையகப் படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஊ.ஆதனூர், கம்மாபுரம், மும்முடி சோழகன் உள்ளிட்ட கிராமங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மொத்தம் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பகுதியை கையகப்படுத்து வதற்கான பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஏற்கெனவே நிலம் வழங்கியவர் களுக்கு போதிய இழப்பீடு தொகை தரப்படவில்லை என்று குற்றம்சாட்டும் கிராம மக்கள், நிலம் தந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் வலி யுறுத்தி உள்ளனர்.