தமிழக அமைச்சர் வீட்டில் சோதனை

தமிழக அமைச்சர் வீட்டில் சோதனை

1 mins read
65f0e762-bd52-4c21-8cf4-d15b333a5aa9
-

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சென்னை திருவல்லிக்கேணி யில் உள்ள அமைச்சரின் உதவி யாளர் நைனார் வீட்டில் மேற் கொண்ட சோதனையில் ரூ.2.2 கோடியை அதிகாரிகள் கைப்பற் றியதாகத் தமிழக ஊடகங்கள் கூறின. சென்னை ஆர்கே நகரில் வரும் 12ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அதிமுக அம்மா அணி சார்பாக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் அணி, திமுக என போட்டி பலமாக இருப்பதால் இந்தத் தேர்தலில் எப்படியும் வென்றே தீருவது என தினகரன் கங்கணம் கட்டி வருகிறார். இதையடுத்து, வாக்காளர் களுக்குப் பணம் அள்ளி வீசப் படுவதாகச் சொல்லப்படுகிறது. ஒரு வாக்குக்கு ரூ.4,000 என்ற அடிப்படையில் பணம் தரப்படு கிறதாம்.