ஆர்கே நகரில் வாக்காளர்களுக்குப் பணம்: 89 கோடி ரூபாய் முறைகேடு அம்பலமானது

ஆர்கே நகரில் வாக்காளர்களுக்குப் பணம்: 89 கோடி ரூபாய் முறைகேடு அம்பலமானது

1 mins read

சென்னை ஆர்கே நகர் இடைத் தேர்தல் தொடர்பாக 89 கோடி ரூபாய் (சுமார் 18 மில்லியன் சிங் கப்பூர் வெள்ளி) அளவுக்கு முறை கேடு நடந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இந்தத் தொகுதி வாக்காளர் களுக்குப் பணம் விநியோகிக்கப் படுவதாக தொடர்ச்சியாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வருமான வரித் துறை அதிகாரிகள் சென்னையில் சோதனைகளை நடத்தினர். சுகாதார அமைச்சர் சி.விஜய பாஸ்கர், அவரது உதவியாளர்கள் ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட ஐம்பது இடங்களில் துணை ராணுவப் படையினரின் உதவியோடு சோதனை மேற் கொள்ளப்பட்டது. அப்போது பணம் விநியோகிக்கத் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு ஆவ ணங்களை அதிகாரிகள் கைப் பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.