தருண் விஜயின் 'கருப்பர்கள்' கருத்துக்கு வலுக்கும் கண்டனம்

தருண் விஜயின் 'கருப்பர்கள்' கருத்துக்கு வலுக்கும் கண்டனம்

1 mins read
d67ac48d-c137-4b1b-ba20-113431ba7754
-

சர்ச்சை கருத்து வெளியிட்ட பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்யை நோக்கி கண்டனக் கணைகள் பாய்ந்து வருகின்றன. அண்மையில் கிரேட்டர் நொய்டா கடைத் தொகுதியில் நைஜீரிய மாணவர்கள் இருவர் தாக்கப்பட்ட னர். இது இனவெறித் தாக்குதல் என்று ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு சாடியிருந்தது. இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து 'அல் ஜஸீரா' தொலைக் காட்சி நடத்திய விவாதத்தில் கலந்து கொண்ட தருண் விஜய் (படம்), "இந்தியர்கள் நிறவெறியர்களாக இருப்பது மிகவும் தீயது. ஏனெனில் நாங்கள் கிருஷ்ணர் போன்ற கருப்புநிறக் கடவுளை வணங்குகிறோம்," என்றார்.