மதுரை: அலங்காநல்லூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 68 பேர் காயம் அடைந்தனர். தடை நீங்கியதால் தமிழகம் முழுவதும் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடந்தது. ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் முற்பட்டனர். போட்டியில் மொத்தம் 588 காளைகளுடன் 772 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். மாடுகள் முட்டியதில் 68 பேருக்குக் காயம் ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டு: 68 பேர் காயம்
1 mins read

