பணப் பட்டுவாடா: ஒப்புக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

பணப் பட்டுவாடா: ஒப்புக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

1 mins read

சென்னை: இடைத்தேர்தல் நடை பெற இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்யப்பட்டதை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக் கொண்டதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப் புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்.கே.நகரில் பல்வேறு அரசி யல் கட்சியினரும் வாக்காளர்க ளுக்குப் பண விநியோகம் செய்து வருவதாக தொடர் புகார்கள் எழுந் தன. இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, அவரது உதவியாளர் வீடு, நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக் கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வீடுகள் உட்பட பல்வேறு இடங் களில் வருமான வரித்துறையினர் அண்மையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.