புதுடெல்லி: பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந் திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சந்தேகத்தைக் கிளப் பினார். புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் குறை கூறியிருந்தார். மேலும் சில மணி நேரம் மின் னணு இயந்திரங்களை வழங் கினால் அதில் உள்ள மென் பொருளை மாற்றிவிடுவேன் என்றும் திரு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்திருந்தார்.
எதிர்க்கட்சிகள் மனு: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வேண்டாம்
1 mins read

