கேரளாவில் கட்டாய மலையாளம்

கேரளாவில் கட்டாய மலையாளம்

1 mins read

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மலையாள மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவுக்கு ஆளுநர் சதாசிவம் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை மீறும் பள்ளிகள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள சில பள்ளிகளில் மலையாளம் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் வந்ததைத் தொடர்ந்து பள்ளிகளில் மலையாளம் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் அவசர சட்டம் கொண்டு வர இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.