ரூ.130 கடன் பிரச்சினையில் ஹோட்டல் ஊழியர் பலி

ரூ.130 கடன் பிரச்சினையில் ஹோட்டல் ஊழியர் பலி

1 mins read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஹஃபிஸ் ஹோட்டலில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர், சக ஊழியருடன் ஏற்பட்ட கைகலப்பில் உயிரிழந்தார். ரூ.130 கடன் தொடர்பில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்று காவல்துறையினர் கூறினர். கடந்த திங்கட்கிழமை அன்று 130 ரூபாய் கடனைத் திருப்பி கொடுக்குமாறு ராஜுவிடம் கம்லேஷ் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கம்லேஷ் தள்ளியதால் சுவர் மீது மோதியதில் ராஜு படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கம்லேஷை விசாரித்து வருகின்றனர்.