இடைத்தேர்தலுக்காகச் செலவிட்ட தொகையைக் கேட்கும் வேட்பாளர்

இடைத்தேர்தலுக்காகச் செலவிட்ட தொகையைக் கேட்கும் வேட்பாளர்

1 mins read

சென்னை: இடைத்தேர்தலுக்காகச் செலவிட்ட தொகையைத் தங்களுக்குத் திருப்பித்தர வேண்டுமென ஆர்.கே.நகரில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் ஆனந்த் கோரியுள்ளார். இது தொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அவர் மனு அளித்துள்ளார். இதற்கிடையே, இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தேர்தல் ஆணையம் செலவிட்ட 1.10 கோடி ரூபாய் வீணாகி உள்ளது. இடைத்தேர்தலை நடத்துவதற்கு ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவாகும். ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு நடைபெறாததால், அங்கு தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியாகும் வரை ரூ.1.10 கோடி மட்டும் செலவாகியுள்ளது. இந்நிலையில், ஆர்.கே.நகரில் தேர்தலை நடத்த ஐந்து மாதங்கள் வரை ஆகும் என தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.