பிரதமர், மைத்ரேயன் திடீர் சந்திப்பு

பிரதமர், மைத்ரேயன் திடீர் சந்திப்பு

1 mins read

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மைத்ரேயன் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருபது நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், நட்பு ரீதியில் பிரதமரைச் சந்தித்ததாகக் கூறினார். "தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசினோம். வேறு முக்கியத்துவம் ஒன்றும் இல்லை," என்றார் மைத்ரேயன்.