நாராயணசாமி: விவசாயிகள் பற்றி பிரதமருக்கு அக்கறை இல்லை

நாராயணசாமி: விவசாயிகள் பற்றி பிரதமருக்கு அக்கறை இல்லை

1 mins read

சென்னை: பிரதமர் மோடிக்கு விவசாயிகள் குறித்து அக்கறை ஏதுமில்லை என புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கும் புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏதுமில்லை என்றார். "விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு நிவாரணம் வழங்காதது வருத்தம் அளிக்கிறது. "எனக்கும், ஆளுநர் கிரண் பேடிக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தப்படுகின்றன," என்றார் முதல்வர் நாராயணசாமி.