சென்னை: தமிழக அரசியல் களத்தில் தினந்தோறும் மாறும் காட்சிகளைப் பொதுமக்கள் வியப் போடும் கவலையோடும் பார்த்து வருகின்றனர். இந்த வார திடீர் திருப்பமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. இரு அணிகளும் இணையும் பட்சத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் திடீரென புகுந்து ஆதிக்கம் செய் யும் டிடிவி தினகரனை விரட்ட வேண்டும், ஒதுக்க வேண்டும் எனும் முனைப்புடன் இரு அணி களும் செயல்படத் துவங்கி உள்ள தாக அரசியல் கவனிப்பாளர்களும் கருதுகின்றனர். காலஞ்சென்ற ஜெயலலிதா தலைமையில் அமைந்த அதிமுக அரசின் ஆயுட் காலத்தை முழு மையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. இந்த ஒரே ஒரு காரணம்தான் அக்கட்சியின் இரு அணிகளையுமே அதிகம் யோசிக்க வைக்கிறது.
கைகோர்க்கும் ஓபிஎஸ், எடப்பாடி: தினகரனை ஒதுக்க புது வியூகம்
1 mins read

