2,000 போலி வங்கிக் கணக்குகள்

2,000 போலி வங்கிக் கணக்குகள்

1 mins read

லக்னோ: சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி நகர ஸ்டேட் வங்கிக் கிளையில் திடீரென சோதனை நடத்தினர். ரூபாய் நோட்டுகள் மதிப் பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அங்கு 2,000க்கும் மேற் பட்ட போலி கணக்குகள் தொடங்கப்பட்டதை அவர்கள் கண்டறிந்தனர். அந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை சிலர் வெள்ளையாக்கி உள்ளனர். இதற்கு, வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. புதிய கணக்குகள் தொடங்கியது மட்டுமல்லாமல் ஏற்கெனவே செயல்படாமல் இருந்த கணக்குகளையும் கறுப்புப் பணத்தை மாற்ற அவர்கள் பயன்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.