புதுடெல்லி: செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் புதிய நோட்டுகளாக மாற்றும் நூதன மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவித் தது. மக்கள் தங்கள் கைவசம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலும் தபால்நிலையங்களி லும் டிசம்பர் 30ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரி விக்கப்பட்டது. ரூபாய் நோட்டு தடை காலத் தில் வெளிநாட்டில் இருந்த இந்தியர்கள் இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதுதவிர, வெளிநாடுவாழ் இந் தியர்கள் (என்ஆர்ஐ) தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை வரும் ஜூன் 30ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அனுமதித்தது.
செல்லாத ரூபாய் நோட்டுகள் வெளிநாடுகளுக்கு கடத்தல்
1 mins read

