தமிழகம் முழுவதும் பரவுகிறது விவசாயிகள் நடத்தும் போராட்டம்

தமிழகம் முழுவதும் பரவுகிறது விவசாயிகள் நடத்தும் போராட்டம்

1 mins read

தூத்துக்குடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயி கள் நடத்தி வரும் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசிடம் மண்டியிட்டு கோரிக்கைகளை கேட்பது போன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் திருச்சியில் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியல் நடத்தினர். திருச்சி, மணப்பாறையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்களை போலிசார் கைது செய்தனர். மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.