100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை மாயம்

1 mins read

கடலூர்: சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை திருடுபோனதால் கடலூரில் பரபரப்பு நிலவுகிறது. குமராட்சி அருகே உள்ள உத்திராபதீஸ்வரர் கோவிலில் நூறு ஆண்டுகள் பழமையான, ஐம்பொன் சுவாமி சிலை இருந் தது. இச்சிலை மிகவும் மகிமை வாய்ந்தது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த திங்கட்கிழமை, இக் கோவிலில் வழக்கமான பூசை கள் முடிந்த பின்னர், கோவிலை பூட்டிச் சென்றுள்ளார் குருக்கள். எனினும் மறுநாள் காலை அவருக்கு அதிர்ச்சி காத்தி ருந்தது. செவ்வாய்க்கிழமை காலை கோவிலுக்கு அவர் வந்தபோது, கோவில் கதவின் பூட்டு உடை பட்டுக் கிடந்தது. மேலும், உள்ளே இருந்த ஐம்பொன்னால் ஆன சுவாமி சிலை திருடப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அப்பகுதி மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திருடுபோன சுவாமி சிலை 2 அடி உயரம், 5 கிலோ எடையிலான ஐம்பொன் சிலையாகும்.