ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இடையேயான சமரச முயற்சி

ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இடையேயான சமரச முயற்சி

1 mins read
baaf93c6-5676-4288-8cfe-1f848013d643
-

சென்னை: பிளவுபட்டு நிற்கும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நீடித்துவரும் போதி லும், இரு அணிகளும் திடீர் திடீரென முன்வைக்கும் பல்வேறு நிபந்தனைகள் காரணமாக சமரசப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் இரு அணிகளாகச் செயல்பட்டு வரு கின்றனர். இந்நிலையில் அமைச் சர் விஜயபாஸ்கர் வீட்டில் வரு மான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனைக்குப் பின்னர் காட்சிகள் வேகமாக மாறின. மேலும், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் ரூ.50 கோடி வரை லஞ்சமாகத் தர முன்வந்தார் எனும் குற்றம்சாட்டும் எழவே, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தாரை ஒட்டுமொத்தமாக விலக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி தரப்பு அறிவித்தது.