திமுக: தமிழகத்தில் பாஜக காலூன்றுவது பகல் கனவு

திமுக: தமிழகத்தில் பாஜக காலூன்றுவது பகல் கனவு

1 mins read
00720311-5ec4-43ef-8966-365907413976
-

சென்னை: தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க முடியும் என்று நினைத்தால் அது பகல்கனவாகவே முடியும் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரி வித்துள்ளார். திமுக மற்றும் பிற கட்சிகள் இணைந்து நடத்திய முழு அடைப்புப் போராட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சில கருத்து களைத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகை யில் துரைமுருகன் நேற்று வெளி யிட்ட அறிக்கையில், "திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டம், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பதை தமிழிசை சௌந்தர்ராஜனால் பொறுத்துக் கொள்ளமுடியாமல் கதைக்கு உத வாத வாதங்களை முன்வைக் கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார். காவிரி விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய சட்டப் போராட்டங்களையும் பெற்ற வெற்றிகளையும் மறந்துவிட்டு தமிழிசை பேசியிருப்பதாக துரை முருகன் கூறியுள்ளார்.2017-04-27 06:00:00 +0800