அபுதாபிக்குச் செல்கிறார் இமான் அகமது

அபுதாபிக்குச் செல்கிறார் இமான் அகமது

1 mins read
15b876a7-8042-4c0f-9162-dfd9124eea7b
-

மும்பை மருத்துவமனையில் உடல் பருமன் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இமான் அகமது என்ற எகிப்திய பெண் அபுதாபிக்கு விரைவில் செல்ல உள்ளார். சிகிச்சைக்கு முன்பாக கார்கோ விமானத்தில் வந்தவர் இப்போது வர்த்தக வகுப்புப் பயணியாகப் பயணிக்கும்படி செய்திருக்கிறோம் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அபர்ணா பாஸ்கர் கூறினார். 23.9.2016ல் 500 கிலோ எடை இருந்தவர் இப்போது 176.6 கிலோ எடை அளவில் அவரது உடல் பருமன் குறைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர், இமான் அகமது, 37. கிட்டத்தட்ட 500 கிலோ எடையுடைய இவர்தான் உலகத்திலேயே மிகவும் உடல் பருமனான பெண்ணாகக் கருதப்பட்டார். நாங்கள் இலவசமாகவே உடல் எடையைக் குறைக்கிறோம் என மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனை அறிவித்ததை அடுத்து உடல் எடையைக் குறைப்பதற்காக மும்பைக்கு வந்து சிசிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், அவரது சகோதரி சாய்மா சலீம், "முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை," என மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளித்ததை அடுத்து இமான் அகமது இந்தியாவில் இருந்து வெளியேறி அபுதாபியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் செல்கிறார்.

மும்பையின் சைஃபீ மருத்துவமனையில் பிப்ரவரி மாதம் முதல் எடை குறைப்பு சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இமான் அகமது. படம்: மிட் டே