எட்டு நீதிபதிகள் வெளிநாடு செல்ல தடை

எட்டு நீதிபதிகள் வெளிநாடு செல்ல தடை

1 mins read

புதுடெல்லி: கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட எட்டு நீதிபதிகள் வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். "இன்று குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் முன் னிலையாகத் தவறிவிட்டனர். இதனால் இந்த விவகாரம் மே 1ஆம் தேதி விசாரிக்கப்படும். இதற்கிடையில் எட்டு பேரும் விமானத்தில் செல்ல விமான கட்டுப்பாட்டு ஆணையம் அனு மதிக்கக்கூடாது," என்று தமது உத்தரவில் கர்ணன் தெரிவித் துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதி பதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் தற்போது கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார். இவர் நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்களை வெளியிட்டு பிரதமருக்கும் அதிபருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.