சென்னை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சுட்டெரித்து வந்த கோடை வெயிலின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. தற்போது கடல் காற்று வீசுவதே வெப்பம் குறைய காரணம் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் கோடை வெயிலின் உக்கிரம் உச்சத்தில் இருந்தது. கடந்த பதினாறு ஆண்டுகளில் இல்லாத வகையில் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில், கடல் காற்றும், தரைக் காற்றும் மாறி மாறி வீசுவதால் வெப்பத்தின் அளவு கடந்த இரு தினங்களாகக் குறைந்துள்ளது. அடுத்த சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்திருக்கும் என வானிலை நிபுணர்களின் தகவலால் தமிழக மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது
1 mins read

