விவசாயிகளை அவமானப்படுத்தியது பாஜக அரசு: ஜி.ராமகிருஷ்ணன்

விவசாயிகளை அவமானப்படுத்தியது பாஜக அரசு: ஜி.ராமகிருஷ்ணன்

1 mins read
60e8555e-c804-4b61-9f72-5d9703379d01
-

மதுரை: விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் நடந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் அவமானப்படுத்திவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தைப் பேரிடர் பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்கவில்லை எனக் குறை கூறினார்.

"அதிமுகவில் முதல்வர் பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் தலைமை, ஆட்சியைக் கைப்பற்றுவதில்தான் போட்டி போட்டு வருகின்றனர். தமிழகத்தையோ தமிழக மக்களைப் பற்றியோ சிறிதும் கவலைப்படவில்லை. "இதனால் தமிழகத்தில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுத்தி உள்ளது. குடிநீர் கூட இல்லாமல் மக்கள் அல்லல்படுகின்றனர். அரசின் செயல்பட்டால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர்," என்றார் ராமகிருஷ்ணன்.