அதிமுக அணிகள் இணைப்பு பற்றி தமிழிசையைக் கேட்டால் தெரியும் - முத்தரசன்

அதிமுக அணிகள் இணைப்பு பற்றி தமிழிசையைக் கேட்டால் தெரியும் - முத்தரசன்

1 mins read
1d7ae4d2-e25f-4b07-9b2c-8b3297ae58c7
-

திருவாரூர்: அதிமுக அணிகள் இணையுமா என்பது குறித்து தமிழக பாஜக தலைவி தமிழிசையிடம் கேட்டால்தான் தெரியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்கள் கேட்ட கேல்விகளுக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் வரப்போவது பொதுத்தேர்தலா அல்லது இடைத்தேர்தலா, அதிமுக அணிகள் ஒன்றுசேருமா அல்லது சேராதா என்பது குறித்தெல்லாம் தமிழிசையிடம் கேட்டால் பதில் கிடைக்கும். ஏனென்றால் அவர்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்காது என்றார். அதேபோல் நடக்கவில்லை. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் என்றார். முடக்கப்பட்டது," என்று முத்தரசன் கூறினார்.