ஆட்குறைப்பில் இறங்கும் 'ஐடி' நிறுவனங்கள்

ஆட்குறைப்பில் இறங்கும் 'ஐடி' நிறுவனங்கள்

1 mins read

பெங்களூரு: தகவல் தொழில் நுட்பத் துறை எதிர்பாராத அள வுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவின் ஐடி நிறுவனங் களில் அமெரிக்கர்களையே பணி களில் அமர்த்த வேண்டிய சூழலும் நிலவுகிறது. இதுபோன்ற காரணங் களால் இந்தியாவில் பல ஐடி நிறு வனங்கள் ஆட்குறைப்பு நடவடிக் கையில் இறங்கியுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அதிக அளவில் ஆட்குறைப்பு செய்யப்படவுள்ளது. பெரும்பாலும் உயர் பதவிகளில் இருப்பவர்களும் பல ஆண்டு களாகப் பணிபுரிபவர்களும் வேலை இழக்கக்கூடும். பல நிறுவனங்கள் கட்டாய ஓய்வுத் திட்டத்தையும் அறிவித்துள்ளன. ஐடி நிறுவனங்களின் நடவடிக் கைகளுக்கு எதிராக சில பணி யாளர்கள் போர்க்கொடி தூக்கி யுள்ளனர். 'காக்னிஸன்ட்' நிறு வனம் 6,000 பணியாளர்களை நீக் கத் திட்டமிடுகிறது. இன்போசிஸ் நிறுவனம் 1000 பேரை நீக்க உத்தரவிட்டுள்ளது. புதியவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.