எச்ஐவி கிருமி பரவுவதாக வதந்தி; காவல்துறை கடும் எச்சரிக்கை

எச்ஐவி கிருமி பரவுவதாக வதந்தி; காவல்துறை கடும் எச்சரிக்கை

1 mins read

சென்னை: பொதுமக்களை அச்சுதுறுத்தும் வகையில் பரவும் எச்ஐவி கிருமி பரவல் குறித்த வதந்தியை நம்பவேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள் ளது. எச்ஐவி கிருமி பரவி வரு வதாகத் தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலிசார் எச்சரித் துள்ளனர். அண்மைய சில தினங்களாக ஊசி மூலம் மர்ம மனிதர்கள் சிலர் எச்ஐவி கிருமியைப் பரப்பு வதாக தமிழகம் முழுவதும் தக வல் பரவி உள்ளது. அந்த மர்ம மனிதர்கள் ஐஎஸ் பயங்ரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என் றும் கூறப்படுகிறது. "இலவசமாக நீரிழிவு பரிசோ தனை செய்வதாகக் கூறி, சில இளையர்கள் வீடு தேடி வருகி றார்கள். பரிசோதனைக்கு ரத்தம் எடுப்பதாகக் கூறி, ஊசி மூலம் எச்ஐவி கிருமியைச் செலுத்து கிறார்கள். "இதனால் அப்பாவிகள் பலர் எந்தத் தவறும் செய்யாமல் எச்ஐவி கிருமித் தொற்றுக்கு ஆளாகிறார்கள்," என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பலரால் பகிரப்பட்டு வருகிறது.