இந்தியாவில் வேலை இழக்கும் 56,000 கணினி ஊழியர்கள்

1 mins read

இந்தியாவின் கணினி நிறுவ னங்கள் அதிக அளவிலான ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங் கியுள்ளன. ஆகப்பெரிய கணினி நிறு வனங்களில் ஏழு அந்நடவடிக்கை யில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்நிறுவனங்கள் மட்டும் கிட்டத் தட்ட 56,000 ஊழியர்களை இந்த ஆண்டு வீட்டுக்கு அனுப்ப இருப் பதாக 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' உள்ளிட்ட இணையச் செய்தித் தளங்கள் தெரிவித்துள்ளன. ஆட்குறைப்பு நடவடிக்கையை கணினி நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் செய்துவந்தாலும் இவ் வாண்டுதான் ஆக அதிகமான ஊழியர்களை அவை ஆட்குறைப்பு செய்வதாகவும் இந்த ஆண்டின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் வேலை இழந்த ஊழியர்களைக் காட்டிலும் இருமடங்கு என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த ஏழு நிறுவனங்களில் சுமார் 1.24 மில்லியன் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். அந்த எண்ணிக்கையில் 4.5 விழுக் காட்டினரை இந்த ஆண்டு வீட் டுக்கு அனுப்புவது அவற்றின் திட்டமாக உள்ளது. விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக்னாலாஜிஸ், டெக் மஹிந்திரா, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கோக்னி ஸன்ட் டெக்னாலாஜி, சிஎக்ஸ்சி டெக்னாலாஜி, பிரெஞ்சு நிறுவ னமான கேப் ஜெமினி ஆகிய வையே அந்த ஏழு பெரிய நிறுவனங்கள்.