சென்னை: தமிழகம் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் பேரவை விதிகளின்படி வரவு செலவு திட்ட நடைமுறைகள் முழுமை பெறவும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது. சென்னையில் நேற்று நடை பெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிதி அதிகா ரம் படைத்த சட்டப்பேரவையின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசு, நிதியைச் செலவிடுவதை தவிர்க்க பேரவையைக் கூட்டுவது அவசியம் என்றும் திமுக கூறியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் நேற்று திமுக எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டினார். இந்தக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மாற் றப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப் பட்டது. எனினும் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களு டன் தமிழகத்தின் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டப்பேரவை ஜனநாயக மாண்புகளை அதிமுக அரசு சீர்குலைத்துள்ளதாக ஒரு தீர் மானத்தில் குற்றம்சாட்டப்பட் டுள்ளது.

