புதுக்கோட்டை: ஹைட்ரோ கார் பன் திட்டத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தற் போது மண்ணை வாரித் தூற்றும் போராட்டமும் நடந்தேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவ துமே பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டம் வெடித்தது. ஒரு கட்டத்தில், போராட்டக்காரர்களை சமாதானப் படுத்தும் விதமாக பாஜக அமைச்சர் ஒருவரும் அதிமுக அமைச்சர்கள் சிலரும் சில முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது.
நெடுவாசலில் மண்ணை வாரித் தூற்றும் போராட்டம்
1 mins read

